/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண் போலீசாருக்கு 'ஜிம்' திறப்பு விழா
/
பெண் போலீசாருக்கு 'ஜிம்' திறப்பு விழா
ADDED : ஜன 02, 2025 11:17 PM
திருப்பூர்: திருப்பூர் மாநகரில் பெண் போலீசாருக்கு 'ஜிம்' திறக்கப்பட்டது.
திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோர்ட் வீதியில் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் பெண் போலீசார் மற்றும் போலீஸ் துறையில் பணியாற்றும் குடும்பத்தினரின் பெண் உறுப்பினர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு, ஆரோக்கியமாக இருக்க பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம் (ஜிம்) திறக்க முடிவு செய்யப்பட்டது. கமிஷனர் லட்சுமியின் நடவடிக்கை காரணமாக, குடியிருப்பு வளாகத்தில் பெண் போலீசாருக்கான, 'ஜிம்' திறக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநகரில் நடைமுறையில் உள்ள 'டெடிகேட்டடு 'பீட்' திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பில் உள்ளது. சமீபத்தில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து பிரித்து, மாநகரில் இணைக்கப்பட்ட மங்கலம் ஸ்டேஷனில் டெடிகேட்டடு 'பீட்' முறை அறிமுகப்படுத்தப்பட்டு, டூவீலர் மற்றும் பிரத்யோக மொபைல் போன் வழங்கப்பட்டது. இதற்கான 'பீட்' போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதியதாக துவங்கிய, இரு 'பீட்' உட்பட மொத்தம், 24 'பீட்' உள்ளது.