/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொகுதி வளர்ச்சி நிதியில் அங்கன்வாடிகள் திறப்பு
/
தொகுதி வளர்ச்சி நிதியில் அங்கன்வாடிகள் திறப்பு
ADDED : டிச 14, 2024 11:28 PM
திருப்பூர்: எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் கட்டிய அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டது.திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில், மாநகராட்சி 52வது வார்டு, தென்னம்பாளையம் மற்றும் முத்தையன் கோவில் 27 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மையங்களுக்கு புது கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., செல்வராஜ் இவற்றைத் திறந்து வைத்தார். மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.
மேலும், கே.எம்.ஜி., நகரில் 25.80 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மையம் மற்றும் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் இப்பணிகளுக்கு பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் எம்.எல்.ஏ., - மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.