/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வளர்ச்சி பணிக்கு பூமி பூஜை பயணிகள் நிழற்குடை திறப்பு
/
வளர்ச்சி பணிக்கு பூமி பூஜை பயணிகள் நிழற்குடை திறப்பு
வளர்ச்சி பணிக்கு பூமி பூஜை பயணிகள் நிழற்குடை திறப்பு
வளர்ச்சி பணிக்கு பூமி பூஜை பயணிகள் நிழற்குடை திறப்பு
ADDED : ஜன 05, 2024 11:49 PM
அனுப்பர்பாளையம்:திருப்பூர் ஒன்றியம், வள்ளிபுரம் ஊராட்சி, தொட்டிய வலவு பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்க ஒன்றிய பொது நிதியில் இருந்து, 10.89 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்டம்பாளையம் ஊராட்சி, மேட்டுப்பாளையம் பகுதியில், கான்கிரீட் சாலை அமைக்க ஒன்றிய பொது நிதியில் இருந்து, 4 லட்சத்து, 24 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரு பணிகளுக்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது. திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார் பங்கேற்று பணியை துவக்கி வைத்தார்.
திருப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சொர்ணாம்பாள், மாவட்ட கவுன்சிலர் கண்ணம்மாள், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மகாராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகேசன், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர். அதன்பின், பருத்தி காட்டுப்பாளையம் பகுதியில், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதி, 4 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை எம்.எல்.ஏ., திறந்து வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார். எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் எரிவாயு தகன மேடையை ஆய்வு மேற்கொண்டார்.