/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீஸ் கமிஷனர் அலுவலகம் திறப்பு
/
போலீஸ் கமிஷனர் அலுவலகம் திறப்பு
ADDED : அக் 08, 2024 12:39 AM

திருப்பூர் :திருப்பூரில் புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் திறக்கப் பட்டுள்ளது. இதோ அதைக் கடிதம் மூலம் சொல்கின்றனர் போலீசார்.
போலீஸ் சேவையை நாடும் பொதுமக்களுக்கு,
மாநகர போலீசாரின் அன்பு வணக்கம்.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரகம், 2014ல் உருவாக்கப்பட்டது. உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், கமிஷனர் அலுவலகம் நகரின் ஒதுக்குப்புறமான சிறுபூலுவபட்டியில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. பலரும் அலுவலகத்துக்கு சென்று வர சிரமப்பட்டு வந்தனர்.
கடந்த, இரண்டு ஆண்டுக்கு முன்பு, அவிநாசி ரோடு, குமார் நகரில், 2.25 ஏக்கர் நிலத்தை, போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்ட வாங்கி, கட்டுமான பணிகளை துவக்கினர். வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு, அதே பகுதியில் மகளிர், சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு உள்ளிட்ட ஸ்டேஷன்கள் அடங்கிய ஒருங்கிணைந்த ஸ்டேஷன் கட்டுமான பணி நடந்தது. அனைத்து வசதிகளுடன் கட்டடப்பட்ட புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷன் ஆகியவற்றை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சியில், சென்னையில் இருந்து திறந்து வைத்தார். செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், எம்.பி., சுப்பராயன், கலெக்டர் கிறிஸ்துராஜ், போலீஸ் கமிஷனர் லட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
நன்றி.