/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடம் திறப்பு
/
பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடம் திறப்பு
ADDED : மே 24, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: பல்லடம் பஸ் ஸ்டாண்டில், நுழையும் போதே, நுழைவு வாயிலில் உள்ள நகராட்சி இலவச கழிப்பிடத்திலிருந்து வெளியேறும் கடும் துர்நாற்றம் வீசியது.
இதனால், கழிப்பிடத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி, புதிய கழிப்பிடம் கட்ட நகராட்சி மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பல்லடம் நகராட்சி மூலம், 36 லட்சம் ரூபாய் மதிப்பில் குளியலறை, கழிப்பிடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய கழிப்பிடம் நேற்று திறக்கப்பட்டது. கமிஷனர் மனோகரன், நகராட்சி தலைவர் கவிதாமணி, தி.மு.க., நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.