/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொலையாளி உடல் கொண்டுவர எதிர்ப்பு
/
கொலையாளி உடல் கொண்டுவர எதிர்ப்பு
ADDED : ஆக 08, 2025 07:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; எஸ்.எஸ்.ஐ.,யை கொலை செய்த வழக்கில், போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது என்கவுன்டர் செய்யப்பட்ட வாலிபரின் உடல், திருப்பூரில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து, திருப்பூரில் உள்ள மின் மயானத்தில் மணிகண்டனின் உடல் எரியூட்டப்பட்டது. அவரது தாய், மனைவி மட்டும் அப்போது இருந்தனர். மணிகண்டனின் சொந்த ஊரான திண்டுக்கல், வேடசந்துார் அருகேயுள்ள கிராமத்திற்கு, மணிகண்டனின் உடலை கொண்டுவர ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், திருப்பூரிலேயே உடல் எரியூட்டப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.