/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மது ஊற்றி சிறுமிக்கு தொல்லை சிறுவன் உட்பட இருவர் சிக்கினர்
/
மது ஊற்றி சிறுமிக்கு தொல்லை சிறுவன் உட்பட இருவர் சிக்கினர்
மது ஊற்றி சிறுமிக்கு தொல்லை சிறுவன் உட்பட இருவர் சிக்கினர்
மது ஊற்றி சிறுமிக்கு தொல்லை சிறுவன் உட்பட இருவர் சிக்கினர்
ADDED : ஆக 08, 2025 02:58 AM
காங்கேயம்:சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து, பாலியல் தொல்லையில் ஈடுபட்ட இருவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 16 வயது சிறுமி, அவரது நண்பரான மற்றொரு, 16 வயது சிறுவனுடன் நேற்று மதியம், காங்கேயம் - திருப்பூர் ரோடு அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது, அங்கு சிறுவனுக்கு தெரிந்த காங்கேயம், வாய்க்கால்மேட்டை சேர்ந்த சக்திவேல், 45, வந்தார். அவர், சிறுவன், சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்துள்ளார்.
சுய நினைவை இழந்த சிறுமிக்கு, பாலியல் ரீதியாக இருவரும் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவல்படி, காங்கேயம் போலீசார் மூவரையும் அழைத்துச் சென்றனர்.
சக்திவேல், 16 வயது சிறுவனிடம் காங்கேயம் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.