/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு; அ.தி.மு.க., - கம்யூ., கவுன்சிலர்கள் கைது

ADDED : நவ 29, 2024 07:17 AM

திருப்பூர் : சொத்து வரி உயர்வை கண்டித்து மறியல் செய்த திருப்பூர் மாநகராட்சி அ.தி.மு.க., - காங்., - இந்திய கம்யூ., - மா.கம்யூ., - த.மா.கா., கவுன்சிலர்கள் கைது செய்யப்பட்டனர்.
சொத்து வரி ஆறு சதவீதம் உயர்த்தப்பட்டது தொடர்பாக நேற்று நடந்த திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில், கவுன்சிலர்கள் விவாதம் மேற்கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும், மாநகராட்சி அலுவலகம் எதிரேயுள்ள மங்கலம் சாலையில் அமர்ந்து இந்திய கம்யூ., கவுன்சிலர்கள் 5 பேர், காங்., - த.மா.கா., - மா.கம்யூ., கவுன்சிலர்கள் தலா ஒருவர் மறியல் செய்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 17 பேர், அதே இடத்தில் சற்று தள்ளி ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சு நடத்திய போலீசாருடன் கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர். போலீசார் அவர்களை குண்டுக்கட்டாகத் துாக்கி, வாகனங்களில் ஏற்றி கைது செய்து அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.இந்திய கம்யூ., குழு தலைவர் ரவிச்சந்திரனை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முயன்ற போது, போலீசாருடன் மற்ற கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம் செய்தததால் பரபரப்பு நிலவியது.
கைதான அ.தி.மு.க., கவுன்சிலர்களை எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஆனந்தன் உள்ளிட்டோரும், கம்யூ., கவுன்சிலர்களை அக்கட்சி நிர்வாகிகளும் சந்தித்து பேசினர்.