/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுக்கடை அமைக்க எதிர்ப்பு : கலெக்டரிடம் த.வெ.க. மனு
/
மதுக்கடை அமைக்க எதிர்ப்பு : கலெக்டரிடம் த.வெ.க. மனு
மதுக்கடை அமைக்க எதிர்ப்பு : கலெக்டரிடம் த.வெ.க. மனு
மதுக்கடை அமைக்க எதிர்ப்பு : கலெக்டரிடம் த.வெ.க. மனு
ADDED : அக் 29, 2025 12:53 AM
திருப்பூர்: திருப்பூர், மங்கலம் - பல்லடம் ரோட்டில், மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, த.வெ.க., சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதன் வழக்கறிஞர் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார், கலெக்டர் மனிஷ் நாரணவரேவிடம் அளித்த மனு விவரம்:
மங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், த.வெ.க. சார்பில், திடக்கழிவு மேலாண்மை, சுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மனு அளிக்கப்பட்டது. மேலும், மங்கலம் - பல்லடம் ரோட்டில், தனியார் சார்பில், மனமகிழ் மன்றம் என்ற பெயரில், மதுக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால், மக்களின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது.
ஆனால், ஊராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஊராட்சி நிர்வாகம் மீது கலெக்டர் நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கு இடையூறாக மதுக்கடை அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

