/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதை - போன் 'பிடி'யில் மாணவர்கள்: கவுன்சிலிங் உதவியுடன் விடுவிக்க திட்டம்
/
போதை - போன் 'பிடி'யில் மாணவர்கள்: கவுன்சிலிங் உதவியுடன் விடுவிக்க திட்டம்
போதை - போன் 'பிடி'யில் மாணவர்கள்: கவுன்சிலிங் உதவியுடன் விடுவிக்க திட்டம்
போதை - போன் 'பிடி'யில் மாணவர்கள்: கவுன்சிலிங் உதவியுடன் விடுவிக்க திட்டம்
ADDED : அக் 29, 2025 12:54 AM

திருப்பூர்: மாணவ, மாணவியர் மத்தியில் மொபைல்போன் பழக்கம், போதை பழக்கத்துக்கு அடிமையாவதை தவிர்க்க, பள்ளி மேலாண்மைக்குழுவில் மருத்துவத்துறை மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில், ஆலோசகர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சமீப ஆண்டுகளாக மாணவ, மாணவியர் மத்தியில் போதை பழக்கம், மொபைல் போன் மற்றும் சமூக ஊடகங்களுக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. இதனால், மாணவ, மாணவியர் தங்களின் எதிர்காலத்தை இழந்து வருகின்றனர். தங்கள் சுயம் மற்றும் இயல்பை இழக்க செய்யும் இத்தகைய செயல்களில் இருந்து மாணவ, மாணவியரை விடுவிப்பது என்பது ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் சவால் நிறைந்தாக மாறியிருக்கிறது.
மாணவ, மாணவியரின் இத்தகைய போக்கால், அவர்களால் படிப்பிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. மாணவர்களை தண்டிக்கவும், கண்டிக்கவும் முடியாத நிலையில் ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர் ஆசிரியர்கள்.
இதற்கிடையில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசுப்பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித்தரத்தை உயர்த்தவும், அரசு பள்ளிகளை மேம்படுத்தவும், பெற்றோர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அடங்கிய பள்ளி மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இக்குழுவின் செயல்பாடுகளின் ஒரு கட்டமாக, மாணவ, மாணவியரை போதை மற்றும் சமூக வலைதளங்களின் பிடியில் இருந்து விடுவித்து, படிப்பில் அவர்களது நாட்டம் செல்லும் வகையில், மருத்துவத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் வாயிலாக ஆலோசகர்களை தேர்வு செய்து, மாதம் ஒரு முறை அவர்களை பள்ளிக்கு வரவழைத்து, குழந்தைகளுக்கு தேவையான ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்க முடி வெடுக்கப்பட்டுள்ளது.

