/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஓரா' வைர நகை கண்காட்சி சிறப்புத்திட்டம் அறிமுகம்
/
'ஓரா' வைர நகை கண்காட்சி சிறப்புத்திட்டம் அறிமுகம்
ADDED : ஏப் 18, 2025 11:35 PM

திருப்பூர்: திருப்பூரில் 'ஓரா' ஜூவல்லரியின் மூன்று நாள் வைர நகை கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று துவங்கியது.
திருப்பூர், வேலம்பாளையம் ரோட்டில் உள்ள பார்ச்சூன் பார்க் ஓட்டலில் இக்கண்காட்சி நேற்று துவங்கியது. திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் செல்வராஜ் துவக்கி வைத்தார். வாடிக்கையாளர் சுமதி, செல்வராஜ் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றினர்.
'ஓரா' ஜூவல்லரி மேலாளர் பிரபு ராமச்சந்திரன் கூறியதாவது:கண்காட்சி 20ம் தேதி வரை நடைபெறும். காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை வாடிக்கையாளர்கள் பங்கேற்கலாம்.
கண்காட்சியின் சிறப்பாக ஒரு குறிப்பிட்ட மாடலுக்கு 9,999 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொண்டு மறு தவணையில் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.'ஓரா' ஜூவல்லரி, 40 நகரங்களில் 96 கிளைகளுடன் செயல்படுகிறது.
வைர நகைகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில், நீண்ட அனுபவம் கொண்டது. மணப்பெண் அலங்காரம் உள்ளிட்ட பல வகையான நகைகள் உள்ளன.
மரபு வழி நகைகள், பெல்ஜிய வைரங்கள்; 73 முக காப்புரிமை கொண்ட ஓரா கிரவுன் ஸ்டார் எங்கள் சிறப்பு நகைகள்.
சர்வதேச அளவில், ஹாங்காங், டோக்கியோ, நியூயார்க் மற்றும் மும்பை ஆகிய ஐந்து வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளில் 'ஓரா' முன்னிலையில் உள்ளது.

