/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கனவு இல்லத்தில் வீடு கட்ட ரூ.105.38 கோடிக்கு ஆணை
/
கனவு இல்லத்தில் வீடு கட்ட ரூ.105.38 கோடிக்கு ஆணை
கனவு இல்லத்தில் வீடு கட்ட ரூ.105.38 கோடிக்கு ஆணை
கனவு இல்லத்தில் வீடு கட்ட ரூ.105.38 கோடிக்கு ஆணை
ADDED : நவ 19, 2025 03:56 AM
உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டங்களில், 105.38 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிக்கை: குடிசை இல்லாத தமிழகம் என்கிற இலக்கை அடைவதற்காக, கலைஞர் வீடு வழங்கும் திட்டம், கடந்த 2010ல் துவங்கப்பட்டது. கிராமப்புறங்களில், குடிசைக்கு பதிலாக, பாதுகாப்பான கான்கிரீட் வீடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வரும் 2030க்குள், குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்காக, இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டங்களில், மாவட்டத்தில், பயனாளிகளுக்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இவ்விரு திட்டங்களிலும், இதுவரை, மொத்தம் 5,187 பயனாளிகளுக்கு, 105.38 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

