/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
/
கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
ADDED : நவ 19, 2025 03:51 AM
உடுமலை: உடுமலை கடைக்கோடி கிராமங்களுக்கு போதிய அளவு பஸ்கள் இல்லாததால், மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
பொதுமக்கள் தங்களது பல்வேறு பணிகளுக்கு அதிக அளவில் பஸ்களையே பயன்படுத்துகின்றனர். உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, புறநகர் மற்றும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர். ஆனால், கடைகோடி கிராமங்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை. இதனால், இயக்கப்படும் குறைந்த அளவிலான பஸ்களில், மக்கள் தொங்கிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மேலும், இதில் பெண்களும், முதியவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, போக்குவரத்துக்கழக அதிகாரிகள், கிராமங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என, பல்வேறு கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

