/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு
/
துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு
ADDED : மார் 17, 2024 11:55 PM
உடுமலை:தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், திருப்பூர் மாவட்டத்தில், துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும், என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
லோக்சபா தேர்தல் வரும், ஏப்.,19ம் தேதி நடக்க உள்ளதால், திருப்பூர் மாவட்டத்தில், துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளவர்கள் தங்களிடம் உள்ள, துப்பாக்கிகளை உடனடியாக சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களிலோ அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுத முகவர்களிடமோ, படைக்கல சட்டப்படி படைக்கலன்களை ஒப்படைத்து அதற்கான ரசீதுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
பெறப்பட்ட ரசீதுகளை உடனடியாக, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்க வேண்டும். துப்பாக்கியை ஒப்படைக்காவிட்டால், படைக்கலன் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

