/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலைத்திருவிழா போட்டிகள் வரும் 31க்குள் நடத்த உத்தரவு
/
கலைத்திருவிழா போட்டிகள் வரும் 31க்குள் நடத்த உத்தரவு
கலைத்திருவிழா போட்டிகள் வரும் 31க்குள் நடத்த உத்தரவு
கலைத்திருவிழா போட்டிகள் வரும் 31க்குள் நடத்த உத்தரவு
ADDED : அக் 19, 2024 12:36 AM
திருப்பூர்: அரசு பள்ளி மாணவ, மாணவியரின் தனித் திறனை வெளிப்படுத்தும் குறுவள கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. கலை, இலக்கியம், பேச்சு, நடனம், நடிப்பு உள்ளிட்டவற்றில் சிறப்பாக திறமை காட்டும் மாணவர்கள், மாநில போட்டிக்கு அழைத்து செல்லப்பட்டு, பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அக்., 15 முதல், 17 வரை கலைத்திருவிழா நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. எதிர்பாராத, திடீர் மழை காரணமாக, மாநிலம் முழுதும் நடக்கவிருந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த வாரம் (அக்., 15 முதல், 17 வரை) நடத்தப்படாத போட்டிகளை வரும், 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெற்றவர் குறித்த விபரங்களை நவ., முதல் வாரத்துக்குள் 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என மாவட்ட கலைத்திருவிழா பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அக்., 21 முதல், 24 வரை ஒன்பது, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கும், வரும், 22 முதல், 24 வரை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள துவக்கப் பள்ளி மாணவருக்கும் வட்டார அளவிலான குறுவள கலைத்திருவிழா போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரகம் தரப்பில் இருந்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் விரிவான சுற்றறிக்கை பகிரப்பட்டுள்ளது.