/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைமுறை ஓட்டுப்பெட்டி தயார்படுத்த உத்தரவு
/
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைமுறை ஓட்டுப்பெட்டி தயார்படுத்த உத்தரவு
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைமுறை ஓட்டுப்பெட்டி தயார்படுத்த உத்தரவு
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைமுறை ஓட்டுப்பெட்டி தயார்படுத்த உத்தரவு
ADDED : செப் 26, 2024 10:26 PM
திருப்பூர்:தமிழகத்தில், நகர, உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி என, கடந்த முறை 2019 மற்றும் 2021ல் தனித்தனியே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், 2019ல் நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேர்வானவர் பதவிக்காலம், டிச., மாதத்துடன் நிறைவு பெற உள்ளது.
இதையொட்டி, மாநில தேர்தல் கமிஷன், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை துவக்கியுள்ளது. தமிழகத்தில், 12,618 ஊராட்சிகள் மற்றும் 99,327 வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியங்கள் 385; ஒன்றிய வார்டுகள் 6,570 உள்ளன.
சென்னை நீங்கலாக, 36 மாவட்ட ஊராட்சிகளில், 656 மாவட்ட ஊராட்சி வார்டுகளும் உள்ளன. இவற்றில், 2021ல் தேர்தல் நடத்தப்பட்ட ஒன்பது மாவட்ட ஊராட்சிகள் பதவிக்காலம், 2026 வரை உள்ளது; மீதியுள்ள, 27 மாவட்ட ஊராட்சிகளின் பதவிக்காலம் டிச., மாதம் நிறைவு பெறுகிறது.
உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து, இறுதி முடிவு எடுக்காவிட்டாலும், மாநில தேர்தல் கமிஷன் அதற்கான முன்னேற்பாடுகளை துவக்கியுள்ளது. நான்கு விதமான வண்ணங்களில் ஓட்டுச்சீட்டு வழங்கப்பட்டு, 'ரப்பர் ஸ்டாம்ப்' வாயிலாக, ஓட்டுப்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது.
ஓட்டளித்த பின், ஓட்டுச்சீட்டுகளை சேகரிக்க, பிரத்யேக இரும்பு ஓட்டுப்பெட்டிகள் உள்ளன. ஸ்பெஷல், மீடியம் மற்றும் கோத்ரெஜ் என, மூன்று வகையான பெட்டிகள் உள்ளன. 2019ல் தேர்தல் முடிந்து, ஒன்றிய ஊராட்சி அலுவலகங்களில் ஓரம் கட்டப்பட்ட பெட்டிகளை, இம்மாத இறுதிக்குள் தயார் நிலையில் இருக்க, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதால், ஓட்டுப்பெட்டிகளை தயார்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பெட்டிகளின் மூடி, நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்து, பெயின்ட் அடித்து தயார்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் துவங்கியுள்ளன' என்றனர்.

