/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்களுக்கு செஸ் போட்டி 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
/
மாணவர்களுக்கு செஸ் போட்டி 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மாணவர்களுக்கு செஸ் போட்டி 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மாணவர்களுக்கு செஸ் போட்டி 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ADDED : மே 26, 2025 10:43 PM

உடுமலை ;உடுமலையில், பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி நடந்தது.
உடுமலை சதுரங்க கழகம் மற்றும் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை சார்பில், அறக்கட்டளை வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி நடந்தது. இப்போட்டி எட்டு, 11, 15 வயதுக்குட்பட்டவர்களுக்கும், அனைத்து வயதுக்குட்பட்டோருக்கென நான்கு பிரிவுகளில் நடந்தது.
உடுமலை சுற்றுப்பகுதியிலிருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். நான்கு பிரிவுகளிலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் மற்றும் தன்னார்வலர்கள் ராசா, ஜெகதீசன் பரிசுகளை வழங்கினர்.
உடுமலை சதுரங்க கழக உறுப்பினர்கள், சதுரங்க பயிற்சியாளர்கள், பல்வேறு சங்கத்தினர், அறக்கட்டளை பொறுப்பாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.