/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கிய கழிவுநீர்; அடைக்க பிரயத்தனம்
/
பொங்கிய கழிவுநீர்; அடைக்க பிரயத்தனம்
ADDED : அக் 19, 2024 11:55 PM

திருப்பூர்: திருப்பூர், யூனியன் மில் ரோட்டில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கான்கிரீட் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோட்டின் மையப்பகுதியில் பாதாள சாக்கடை திட்ட கழிவு நீர் சேகரிப்பு குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை இதில் ஓரிடத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக ஒரு இடத்தில் ஆள் இறங்கு குழியின் மீது அமைத்திருந்த இரும்பு மூடியை பொத்துக் கொண்டு கழிவு நீர் வெளியேறியது.
ஒரு சில நொடிகளில் இந்த கழிவின் வேகம் அதிகரித்து, ரோடு முழுவதும் பாய்ந்து பரவியது. இதனால் ரோட்டில் வாகனங்கள் செல்வதிலும் பாதசாரிகள் கடந்து செல்வதிலும் பெரும் சிரமம் நிலவியது. தகவல் அறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்தனர். கழிவு நீர் பொங்கிய பகுதியில் அருகிலிருந்த ஆள் இறங்கு குழியில் அடைப்பை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர்.
இப்பணி ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நடந்தது. அதன் பின், அடைப்பு முற்றிலும் அகற்றப்பட்டு கழிவு நீர் முறையாக குழாயில் கடந்து சென்றது.