/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமாடு உயிரிழப்பு கதறியழுத உரிமையாளர்
/
பசுமாடு உயிரிழப்பு கதறியழுத உரிமையாளர்
ADDED : ஜூலை 13, 2025 12:50 AM

பல்லடம் : பல்லடம் அடுத்த, பருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார், 41. கால்நடை வளர்க்கும் விவசாயியான இவர், 10 கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். இதற்காக, தனது விசைத்தறி குடோனை காலி செய்து, அங்கிருந்த பள்ளத்தை, சிமென்ட் சிலாப் கொண்டு மூடி, மாட்டு கொட்டகை அமைத்தார். நேற்று, இரண்டு மாடுகள் சண்டையிட்டுக் கொண்டதில், பசுமாடு ஒன்று சிமென்ட் சிலாப்பை உடைத்துக் கொண்டு பள்ளத்துக்குள் விழுந்தது.
பள்ளத்தில் விழுந்த பசு மாடு கொம்பு உடைந்தபடி, பலத்த காயமடைந்தது. சத்தம் கேட்டு வந்த மாட்டின் உரிமையாளர், பள்ளத்தில் இருந்து மாட்டை மீட்க முயற்சித்தார். காயமடைந்த மாட்டினால் பள்ளத்திலிருந்து எழ முடியவில்லை. அதிக எடை இருந்ததால், மாட்டை வெளியே எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
இரண்டு மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட மாடு, எவ்வித அசைவும் இன்றி கிடந்தது. மாட்டின் வயிற்றை அழுத்தி நாடித்துடிப்பை பார்த்த தீயணைப்பு படை வீரர்கள், மாடு இறந்ததாக கூறினர். இதனை கேட்டு துக்கம் தாங்காத மாட்டின் உரிமையாளர்கள், கதறியழுது அனைவரையும் கலங்க வைத்தது.