/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓசோன் தின விழிப்புணர்வு மாணவர்கள் கலை நிகழ்ச்சி
/
ஓசோன் தின விழிப்புணர்வு மாணவர்கள் கலை நிகழ்ச்சி
ADDED : செப் 18, 2025 12:13 AM

திருப்பூர்; உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் கலைநிகழ்ச்சியுடன் கூடிய விழிப்புணர்வு நேற்று நடைபெற்றது.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 மற்றும் திருப்பூர் வடக்கு மாசுக்கட்டுப்பாடு வாரியம், இணைந்து நிகழ்ச்சியை நடத்தினர். அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் சங்கரநாராயணன் பேசுகையில், ''மனிதர்களுக்கு புற ஊதா கதிர்களால் தோல் புற்றுநோய் போன்ற நோய் ஏற்படும். எனவே மரங்களை வளர்த்து, புதைபடிவ எரிபொருளை தவிர்த்து, புதுப்பிக்கத்தக்க வளங்களை பயன்படுத்தி ஓசோன் படலத்தைப் பாதுகாக்க வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, மாணவ செயலர்கள் தலைமையில் கலைநிகழ்ச்சிகள் வாயிலாகவும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரம் கொடுத்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.