/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி ஆயக்கட்டில் நெற் பயிர்கள் சேதம்
/
அமராவதி ஆயக்கட்டில் நெற் பயிர்கள் சேதம்
ADDED : ஜன 02, 2025 08:12 PM

உடுமலை; அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில், மழைக்கு தாங்காமல் நெற் பயிர்கள் நிலத்தில் விழுந்ததால், விவசாயிகள் பாதித்துள்ளனர்.
அமராவதி புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், நெல் சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிர்கள், கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் மழை காரணமாக பாதித்துள்ளன.
மழைக்கு தாங்காமல் நெற் பயிர்கள் தலைசாய்ந்து, நிலத்தில் விழுந்து முளைத்து வருகின்றன. இதனால், விவசாயிகள் பாதித்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, இயந்திரங்கள் வாயிலாகவே இப்பகுதிகளில் நெல் அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக பெய்த மழை காரணமாக, பயிர்கள் நிலத்தில் விழுந்து முளைத்து, சேதத்தை ஏற்படுத்தியுள்ளது,' என்றனர்.

