/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வலி நிவாரணி மாத்திரை: 4 பேர் கைது
/
வலி நிவாரணி மாத்திரை: 4 பேர் கைது
ADDED : மே 20, 2025 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; பூச்சக்காடு பகுதியில் நேற்று மாலை, சென்ட்ரல் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு பைக்கில் வந்த இருவரிடம் விசாரித்ததில், வலி நிவாரணி மாத்திரைகளை வைத்திருந்தது தெரிந்தது. அதே பகுதியைச் சேர்ந்த கவின், 23 மற்றும் கார்த்திகேயன், 19 என்பது தெரிந்து இருவரையும் போலீசர் கைது செய்தனர். கைதானவர்கள் அளித்த தகவலின் பேரில் அதே பகுதியில் மருந்து கடை வைத்துள்ள பிரபு, 42, ஊழியர் கார்த்திகேயன், 32 ஆகியோரை கைது செய்து, 2,300 வலி நிவாரணி மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.