ADDED : ஏப் 21, 2025 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கலை பண்பாட்டுத்துறை, சேலம் மண்டல கலை பண்பாட்டு மையம், ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில், ஏப்ரல், 15ம் தேதி, உலக ஓவிய தினம் கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, ஓவிய பயிற்சி பட்டறை மற்றும் ஓவியக்கலை கண்காட்சி முகாம், கருமாரம்பாளையம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பயிற்றுநர் ஸ்ரீராமன் போட்டிகளை துவக்கி வைத்தார். முகாமில், ஐந்து முதல், 16 வயதுக்கு உட்பட்ட, 81 மாணவ, மாணவியர் பங்கேற்று ஓவியம் வரைந்தனர்.

