ADDED : ஜூன் 09, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் நடந்து வரும் பராமரிப்பு, பொறியியல் மேம்பாட்டு பணி காரணமாக ரயில்களின் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது.
அவ்வகையில், திருச்சியில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் (எண்:16843) வரும், 12 மற்றும், 14ம் தேதி மதியம், 1:00 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு, 2:20 மணிக்கு கரூர் ஜங்ஷன் வந்தடையும். கரூரில் இருந்து ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வரையிலான பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

