/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
100 சதவீத தேர்ச்சியுடன் பழனியப்பா பள்ளி சாதனை
/
100 சதவீத தேர்ச்சியுடன் பழனியப்பா பள்ளி சாதனை
ADDED : மே 17, 2025 01:28 AM

திருப்பூர் : அவிநாசி பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில், முதல்முறையாக, பிளஸ்2 சி.பி.எஸ்.இ., தேர்வு எழுதிய மாணவர்கள், நுாறு சதவீத தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இப்பள்ளி மாணவர் ஸ்ரீராம், 90.2 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடம், பிரணிதி, 89.6 சதவீத மதிப்பெண்களுடன் இரண்டாமிடம், நக் ஷத்ரா, 88.8 சதவீத மதிப்பெண்களுடன் மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.
இந்தாண்டும் பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில், இப்பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவி தேவஸ்ரீ, 484 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் முதலிடம், 482 மதிப்பெண்களுடன் பிரியதர்ஷினி இரண்டாமிடம், 476 மதிப்பெண்களுடன் கிருத்திக் பிரணவ் மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.
நடப்பாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 53 மாணவர்களில், 8 பேர், 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்; 26 பேர், 400 க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனைபடைத்துள்ளனர்.
கல்வியில் சாதித்த மாணவர்களை, பள்ளி தாளாளர் ராஜ்குமார், செயலாளர் மாதேஸ்வரி, பள்ளி முதல்வர் வித்யாசங்கர், நிர்வாக இயக்குனர் பிரகாஷ், கல்வி திட்ட இயக்குனர் சதீஷ்குமார், அறக்கட்டளை உறுப்பினர்கள் அபிநயா, டாக்டர் நிவேதா, மழலையர் பள்ளி நிர்வாகி யசோதை, பள்ளி ஆலோசகர் உமா மகேஸ்வரி ஆகியோர் பாராட்டினர்.