/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆகஸ்டில் பழனிசாமி திருப்பூர் வருகை
/
ஆகஸ்டில் பழனிசாமி திருப்பூர் வருகை
ADDED : ஜூலை 27, 2025 11:31 PM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., காந்தி நகர் பகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் பகுதி செயலாளர் கருணாகரன் தலைமையில் நடந்தது.
மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது :
ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் பழனிசாமி திருப்பூர் வருவார். திருப்பூரில் இரு தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்வார்.
தமிழக முதல்வர் செயல்பட முடியாத முதல் அமைச்சராக உள்ளார். இந்தியாவிலே அதிக பாலியல் வழக்குகள் இங்குதான் உள்ளது. கட்டப்பஞ்சாயத்து, அடிதடி நடக்கிறது.
மதுரை மாநகராட்சியில் ஐந்து மண்டல தலைவர்கள் மற்றும் நிலை குழு தலைவர்கள் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர். காரணம் ஊழல். கிட்னி திருட்டு வழக்கில் சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.எல்.ஏ., விஜய குமார், முன்னாள் எம்.எல்.ஏ., சிவசாமி, மாநகராட்சி எதிர்க்கட்சி தலை வர் அன்பகம் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.