/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழனிசாமி பிறந்த நாள்: அன்னதானம் வழங்கல்
/
பழனிசாமி பிறந்த நாள்: அன்னதானம் வழங்கல்
ADDED : மே 13, 2025 12:47 AM

திருப்பூர், ; அ.தி.மு.க., பொதுசெயலாளர் பழனிசாமி பிறந்த நாள் விழாவையொட்டி, மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் பழனிசாமி சார்பில், கட்சி பேச்சாளர்களுக்கு நல உதவி வழங்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், ஜெ., மாநில இணை செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் பாலு, ஜெ., பேரவை துணை செயலாளர் பழனிசாமி, ஏ.டி.பி., செயலாளர் கண்ணபிரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
l திருப்பூர் மாநகராட்சி, 42வது வார்டு, செல்லம் நகர் ஸ்ரீசக்தி விநாயகர் கோவிலில், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில், சிறப்பு வழிபாடு மற்றும் யாகம் நடத்தப்பட்டது. பொதுமக்கள், 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
l காங்கயத்தில், பொதுசெயலாளர் பிறந்த நாளையொட்டி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பில், பொது மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், முகாமை துவக்கி வைத்தார். திருப்பூர் தெற்கு தொகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் நலன் வேண்டி, கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
l திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜய குமார், தலைமையில் பெருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.