/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதுப்பொலிவு பெறும் பல்லடம் பஸ் ஸ்டாண்ட்
/
புதுப்பொலிவு பெறும் பல்லடம் பஸ் ஸ்டாண்ட்
ADDED : ஏப் 12, 2025 11:06 PM

பல்லடம்: பல்லடம் பஸ் ஸ்டாண்ட் புதுப்பொலிவு பெறுகிறது.
பல்லடம் பஸ் ஸ்டாண்டில், தினசரி 200க்கும் மேற்பட்ட பஸ்கள் வருகின்றன. கோவை, திருப்பூர், திருச்சி, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் ஸ்டாண்ட் சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகின்றன. புனரமைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
நகராட்சி கமிஷனர் மனோகரன் கூறியதாவது:
பஸ் ஸ்டாண்டுக்கு தினமும், ஆயிரக்கணக்கான பயணியர், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். முன்புறம் உள்ள கழிப்பிடத்தால் துர்நாற்றம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. கழிப்பிடம் அகற்றப்பட்டு, அந்த இடத்தில், பயணிகள், பொதுமக்களின் வசதிக்காக 'ஷெட் அமைக்கப்பட உள்ளது. மேலும், பஸ் ஸ்டாண்டுக்கு பின் புதிய கழிப்பிடம் கட்டப்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலில் வரவேற்பு மற்றும் பெயர் பலகை வைக்கப்பட உள்ளது. பஸ் ஸ்டாண்ட் ஓடுதளத்தை புதுப்பிக்கவும் திட்டம் உள்ளது. முதல் கட்டமாக, பஸ் ஸ்டாண்ட் முழுவதும் வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகின்றன. நிதி ஆதாரத்துக்கு ஏற்ப புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

