/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம் புறவழிச்சாலை திட்டம்; 2 மாதத்தில் பணிகள் துவக்கம்
/
பல்லடம் புறவழிச்சாலை திட்டம்; 2 மாதத்தில் பணிகள் துவக்கம்
பல்லடம் புறவழிச்சாலை திட்டம்; 2 மாதத்தில் பணிகள் துவக்கம்
பல்லடம் புறவழிச்சாலை திட்டம்; 2 மாதத்தில் பணிகள் துவக்கம்
ADDED : ஜூன் 24, 2025 11:42 PM
பல்லடம்; பல்லடம் புறவழிச்சாலை திட்டத்துக்கான பணிகள் இரண்டு மாதங்களில் துவங்க வாய்ப்பு உள்ளது என, நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர்.
பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், இதற்கு ஏதாவது தீர்வு கிடைக்காதா? என, பல ஆண்டுகளாக எதிர்பார்த்துள்ளனர்.
பசுமை வழிச்சாலை, காளிவேலம்பட்டி- - மாதப்பூரை இணைக்கும் புறவழிச்சாலை ஆகிய திட்டங்கள் கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டன.
இதற்கிடையே, பொதுமக்களுக்கு சற்று ஆறுதல் தரும் விதமாக, பல்லடம் - செட்டிபாளையம் ரோடு, பணிக்கம்பட்டி பிரிவு அருகே துவங்கி, பல்லடம் - தாராபுரம் ரோட்டை இணைக்கும் வகையில், புறவழிச் சாலை திட்டம் செயல்படுத்தப்படும்என, சட்டசபையில் அறிவிப்பு வெளியானது. இதனால், பல்லடம் பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
இந்த புறவழிச்சாலை, செட்டிபாளையம் ரோட்டில் துவங்கி, பணிக்கம்பட்டி, நாசுவம்பாளையம், சித்தம்பலம், ஆலுாத்துப்பாளையம் வழியாக தாராபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் இணையும் வகையில், 7.5 கி.மீ., துாரம், 10 மீ., அகலத்துடன் அமைய உள்ளது.
இதற்காக, 54 போடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில், புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்கும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பல்லடம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில் அரசு கூறுகையில், ''தமிழக அரசு உத்தரவின்படி, புறவழிச்சாலை அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள், கடந்த ஏப்., மாதமே துவங்கிவிட்டது. தற்போது, டி.ஆர்.ஓ., வாயிலாக நிலங்களுக்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, 60 சதவீத நில எடுப்பு பணிகளும் முடிவடைந்துள்ளன. நில எடுப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்ததும், சம்பந்தப்பட்டவர்களுக்கு, இழப்பீடு தொகை வழங்கி, சாலை அமைக்கும் பணிகள் துவங்கும். இதற்கு, இரண்டு மாதங்கள் ஆகலாம்,'' என்றார்.