/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம் உழவர் சந்தையும் செயல்படவில்லை
/
பல்லடம் உழவர் சந்தையும் செயல்படவில்லை
ADDED : டிச 18, 2024 11:19 PM

பல்லடம்; திருப்பூர் வணிகர் சங்கங்களின் பேரவையின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பல்லடத்திலும் நேற்று முழுமையான கடையடைப்பு நடந்தது.
பல்லடம் வியாபாரிகள் சங்கமும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. ஓட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும், அமைப்புகளும் இப்போராட்டத்தில் கைகோர்த்தன.
கடையடைப்பு காரணமாக, எப்போதும் பரபரப்பாக காணப்படும் என்.ஜி.ஆர்., ரோடு வெறிச்சோடி காணப்பட்டது. உழவர் சந்தையும் நேற்று செயல்படாத நிலையில், தினசரி மார்க்கெட்டில் மட்டும் சில பூ, காய்கறி மற்றும் பழக்கடைகள் திறந்திருந்தன.
மற்றபடி, நகரப் பகுதியில் காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை முழுமையான கடையடைப்பு நடந்தது.
கடையடைப்பினை முன்னிட்டு, பொதுமக்கள் நடமாட்டமும் வெகுவாக குறைந்தது. நகராட்சி பகுதி மட்டுமின்றி, புறநகரப் பகுதிகளிலும் கடையடைப்பு போராட்டத்தின் தாக்கம் எதிரொலித்தது.

