/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம் தலைமை காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு
/
பல்லடம் தலைமை காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு
ADDED : மார் 18, 2025 04:35 AM

பல்லடம்,: பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில், குற்றப்பிரிவு தலைமை காவலர் மாரடைப்பில் உயிரிழந்தது, போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலுாரை சேர்ந்தவர் விஜயகுமார், 38. பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில், குற்றப்பிரிவு தலைமை காவலராக வேலை பார்த்து வருகிறார். குடும்பத்துடன், மாணிக்காபுரம் ரோட்டில் வசிக்கிறார். கடந்த, 2014ம் ஆண்டு பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணியமர்த்தப்பட்ட இவர், தற்போது குற்றப்பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து வீடு திரும்பிய இவர், சாப்பிட்டு முடித்த சிறிது நேரம் கழித்து, உடல் சோர்வாக இருப்பதாகவும், நெஞ்சு வலி உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டி ஆட்டோவை வரவழைப்பதற்குள் மயக்கமடைந்தார். பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
மாரடைப்பு காரணமாக தலைமை காவலர் உயிரிழந்தது, போலீசார் மத்தியில் அதிர்ச்சியுடன், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விஜயகுமாரின் உடல், சொந்த ஊரான கடலுாருக்கு எடுத்துச் செல்ல உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.