/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம் கோவில் கும்பாபிஷேகம் உள்ளூர் விடுமுறைக்கு வேண்டுகோள்
/
பல்லடம் கோவில் கும்பாபிஷேகம் உள்ளூர் விடுமுறைக்கு வேண்டுகோள்
பல்லடம் கோவில் கும்பாபிஷேகம் உள்ளூர் விடுமுறைக்கு வேண்டுகோள்
பல்லடம் கோவில் கும்பாபிஷேகம் உள்ளூர் விடுமுறைக்கு வேண்டுகோள்
ADDED : நவ 30, 2024 04:29 AM
பல்லடம்: பல்லடம் பொன்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் பொன்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், டிச., 5ல், கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என, முதல்வர் தனிப்பிரிவு, தலைமை செயலர் மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மார்கழி உற்சவ விழா குழுவினரின் அனுப்பி மனு:
பல்லடம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பொன்காளி அம்மன் கோவில், 500க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு குலதெய்வமாக உள்ளது. கோவிலில், கும்பாபிேஷகம் டிச., 5 அன்று விமரிசையாக நடைபெற உள்ளது.
நகரின் மத்தியில் கோவில் உள்ளதாலும், கடைவீதி, கோர்ட், பள்ளி கல்லுாரிகள், சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் கடைகள் வணிக வளாகங்கள் அருகிலேயே அமைந்துள்ளதாலும், கும்பாபிஷேக விழாவின்போது இட நெருக்கடி ஏற்படும்.
பல்லாயிரம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பார்கள் என உத்தேசிக்கப்படுகிறது. இதன் காரணமாக, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்.
பல்லடம் வட்டார பகுதியில் உள்ள அனைத்துப் பகுதி மக்களும் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. பக்தர்கள் இடையூறு இன்றி பங்கேற்க வசதியாக, பல்லடத்துக்கு, டிச., 5 ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.