/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்டிய வாகனம்; அபராதம் விதித்தது ஊராட்சி
/
குப்பை கொட்டிய வாகனம்; அபராதம் விதித்தது ஊராட்சி
குப்பை கொட்டிய வாகனம்; அபராதம் விதித்தது ஊராட்சி
குப்பை கொட்டிய வாகனம்; அபராதம் விதித்தது ஊராட்சி
ADDED : நவ 23, 2025 07:03 AM
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லுார் ஊராட்சி, சி.எஸ்.ஐ சர்ச்சில் இருந்து, பால சமுத்திரம் செல்லும் வழியில் சுடுகாடு உள்ளது.
நேற்று முன்தினம் இரவு ஒரு தனியார் பனியன் ஏற்றுமதி நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் உள்ள கழிவுகளை வேனில் கொண்டு வந்து கொட்டினர். தொடர்ந்து தீ வைத்துள்ளனர்.
காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை செயலாளர் குமார், வாகனத்தை பிடித்து பெருமாநல்லுார் போலீசில் ஒப்படைத்தார். ஊராட்சி நிர்வாகத்தில் புகார் செய்தார்.
விசாரணையில் கணக்கம் பாளையம் பிரிவு பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் இருந்து கழிவுகள் கொண்டு வந்தது தெரிய வந்தது.
குப்பைகளை கொட்டிய பனியன் நிறுவனத்திற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்டி நிர்வாகத்தினர் வாகனத்தை மீட்டு சென்றனர்.

