/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளிக்கு நுண்திறன் வகுப்பறை கட்டிக் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர்
/
அரசு பள்ளிக்கு நுண்திறன் வகுப்பறை கட்டிக் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர்
அரசு பள்ளிக்கு நுண்திறன் வகுப்பறை கட்டிக் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர்
அரசு பள்ளிக்கு நுண்திறன் வகுப்பறை கட்டிக் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர்
ADDED : நவ 28, 2024 05:03 PM

காங்கேயம் : காங்கேயம் அடுத்துள்ள படியூரில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலனுக்காக படியூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஜீவிதாசண்முகசுந்தரம் தன் சொந்த செலவில் ரூ.5 லட்சம் செலவில் நுண் திறன் கொண்ட இரண்டு வகுப்பறைகளுக்கு வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.
இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின் வகுப்பறையில் பள்ளி மாணவ மாணவிகளுடன் அமர்ந்து நுண் திறன் திரையில் ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்துவதையும், நுண் திறன் திரையில் உள்ள வசதிகளையும் பற்றி கேட்டறிந்தார்.
தொடர்ந்து குளம், குட்டைகள், பொதுகிணறுகள் மற்றும் பொது ஆழ்துளைகிணறுகள் ஆகியவற்றிற்கு மழைக்காலங்களில் பொழியும் தண்ணீரை கொண்டு செல்லும் கால்வாய்களை சரிசெய்து மழைநீர் தங்குதடையின்றி செல்வதை உறுதிசெய்யவும், பயன்பாட்டில் இல்லாதகுளம், குட்டைகள், பொதுகிணறுகள், பொது ஆழ்துளைகிணறுகள் மற்றும் அரசு கட்டடங்களில் உள்ளமழை நீர்சேகரிப்பு தொட்டி ஆகியவற்றில்மழை நீரை வீணாக்காமல் செறிவூட்டி நிலத்திடி நீர்மட்ட அதிகரிப்பை உறுதிசெய்ய உரிய உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காங்கேயம் யூனியன் படியூர் ஊராட்சி இந்திரா நகரில் உள்ள பயன்பாட்டில் இல்லாத இரண்டு பொதுதிறந்த வெளிகிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணற்றில்நீர் செறிவூட்டும் திட்டத்தின் முன் மாதிரிபணியாக மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.