/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் இணைப்புக்கு லஞ்சம்; ஊராட்சி செயலாளர் கைது
/
குடிநீர் இணைப்புக்கு லஞ்சம்; ஊராட்சி செயலாளர் கைது
குடிநீர் இணைப்புக்கு லஞ்சம்; ஊராட்சி செயலாளர் கைது
குடிநீர் இணைப்புக்கு லஞ்சம்; ஊராட்சி செயலாளர் கைது
ADDED : ஜூலை 09, 2025 11:17 PM

திருப்பூர்; திருப்பூர் அருகே குடிநீர் இணைப்பு வழங்க, 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி ஊராட்சி செயலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியம், எல்லப்பாளையம் புதுாரை சேர்ந்தவர் மகேஷ் பிரபு, 44. இவரது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெற  எல்லப்பாளையம் புதுார் ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார். விண்ணப்பத்தை பரிசீலித்து, குடிநீர் இணைப்பு வழங்க ஊராட்சி செயலாளர் செல்வராஜ், 51 என்பவர், 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்.
இதனால், அதிர்ச்சியடைந்த மகேஷ் பிரபு திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின் படி, லஞ்ச பணத்தை நேற்று காலை அலுவலகத்தில் ஊராட்சி செயலாளரிடம் மகேஷ் பிரபு வழங்கியபோது, டி.எஸ்.பி., ரவிசந்திரன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். லஞ்ச பணத்தை பறிமுதல் செய்து, அலுவலகத்தில் சோதனை செய்தனர். கணக்கில் வராத, 71 ஆயிரத்து, 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

