/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சி செயலர் பணியிட மாற்றம் ரத்து; ஒரே நாளில் வெளியான இரு உத்தரவுகள்
/
ஊராட்சி செயலர் பணியிட மாற்றம் ரத்து; ஒரே நாளில் வெளியான இரு உத்தரவுகள்
ஊராட்சி செயலர் பணியிட மாற்றம் ரத்து; ஒரே நாளில் வெளியான இரு உத்தரவுகள்
ஊராட்சி செயலர் பணியிட மாற்றம் ரத்து; ஒரே நாளில் வெளியான இரு உத்தரவுகள்
ADDED : ஆக 25, 2025 10:22 PM
பல்லடம்; பல்லடத்தில், ஊராட்சி செயலர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதே நாளில், அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம் ஒன்றிய பி.டி.ஓ.,வாக, வேலுசாமி, 23ம் தேதி பொறுப்பேற்றார். அதே நாளில், ஊராட்சி செயலர்கள் இருவரை பணியிட மாற்றம் செய்து அவர் உத்தரவிட்டார்.
கணபதிபாளையம் ஊராட்சி செயலாளராக இருந்த பிரபு சங்கர் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகள், புகாரை முன்வைத்து, முந்தைய பி.டி.ஓ., கனகராஜ், மே மாதம் அவரை பணியிட மாற்றம் செய்திருந்தார்.அதன்படி, வடுகபாளையம் புதுார் ஊராட்சி செயலர் கிருஷ்ணசாமி கணபதிபாளையத்துக்கும், பிரபு சங்கர், வடுகபாளையம் புதுார் ஊராட்சிக்கும் மாற்றப்பட்டனர்.
இதற்கிடையே, கடந்த, 23ல் பி.டி.ஓ., கனகராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, வேலுசாமி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற அன்றே, கணபதிபாளையம் ஊராட்சிக்கு பிரபு சங்கரையும், வடுகபாளையம் புதுார் ஊராட்சிக்கு கிருஷ்ணசாமியையும் பழையபடி மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
பொறுப்பேற்ற உடனே ஊராட்சி செயலரை மட்டும் உடனடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட வேண்டிய அவசரம் என்ன என்ற கேள்வி எழுந்தது. இச்சூழலில், ஊராட்சி செயலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக, மற்றொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிர்வாக காரணங்களுக்காகவே, ஊராட்சி செயலர்கள் மாற்றப்பட்டதாக பி.டி.ஓ., வேலுசாமி கூறிய கருத்து, நேற்று முன்தினம், 'தினமலர்' நாளிதழில் செய்தியாக வெளியானது.
ஆனால், செயலர்கள் மாற்றப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது குறித்து பி.டி.ஓ., தெரிவிக்கவில்லை. திடீரென, பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதே நாளில், அதை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ள கடிதம், வலைதளங்களில் வைரலாகி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.