/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாண்டியாறு - மாயாறு திட்டம்; மார்ச் 31ல் வாகன பேரணி
/
பாண்டியாறு - மாயாறு திட்டம்; மார்ச் 31ல் வாகன பேரணி
பாண்டியாறு - மாயாறு திட்டம்; மார்ச் 31ல் வாகன பேரணி
பாண்டியாறு - மாயாறு திட்டம்; மார்ச் 31ல் வாகன பேரணி
ADDED : பிப் 20, 2025 11:58 PM
திருப்பூர்; 'பாண்டியாறு - மாயாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து, விழிப்புணர்வு பேரணி நடத்த, பாண்டியாறு- மாயாறு இணைப்புத்திட்ட பூர்வாங்க பாசன சபை திட்டமிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே ஓவேலி பகுதியில் உருவெடுக்கும் பாண்டியாறு நீர், வீணாக கேரளாவுக்கு செல்கிறது.
இதைத் தடுத்து, முதுமலை மாயாறுக்கு திருப்புவதன் வாயிலாக, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஆண்டு முழுக்க நீர் கிடைக்கும்; இது, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட மக்கள், விவசாயிகளுக்கு பெரும் பயனளிக்கும்.
பாண்டியாறு- மாயாறு இணைப்பு திட்ட பூர்வாங்க பாசன சபை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரபு கூறியதாவது;தமிழகத்தில் உற்பத்தியாகும் பாண்டியாறு நீரை திருப்பி, மாயாற்றில் இணைத்தால், தமிழகத்துக்கு, 3.29 டி.எம்.சி., நீர் கூடுதலாக கிடைக்கும்.
இத்திட்டத்துக்கு 100 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும் என, தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டிருக்கிறது. கொங்கு மண்டல மக்களின் விவசாய மற்றும் நீர் தேவையை பூர்த்தி செய்ய இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
திட்டத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில், அடுத்த மாதம், 31ம் தேதி, ஈரோடு மாவட்டம் நம்பியூரில் துவங்கி, திருப்பூர் மாவட்டம் அவிநாசி சேவூர் வரை, விழிப்புணர்வு வாகன பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

