/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., கால்வாய்கள் துார்வாரும் பணி; கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு
/
பி.ஏ.பி., கால்வாய்கள் துார்வாரும் பணி; கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு
பி.ஏ.பி., கால்வாய்கள் துார்வாரும் பணி; கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு
பி.ஏ.பி., கால்வாய்கள் துார்வாரும் பணி; கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு
ADDED : டிச 19, 2025 06:52 AM

உடுமலை: பி.ஏ.பி., பாசன கால்வாய்கள் துார்வாரும் பணியை, கண்காணிப்பு அலுவலர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
பி.ஏ.பி., பாசன திட்டத்தின் ஆதாரமாகவும், திருமூர்த்தி அணையிலிருந்து பாசன நிலங்களுக்கு நீர் கொண்டு செல்லும் கால்வாய்கள் சிதிலமடைந்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், பாசன நிலங்களுக்கு முழுமையாக நீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதற்கு தீர்வு காணும் வகையில், பாசன கால்வாய்களை புதுப்பிக்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதன் அடிப்படையில், பாசன கால்வாய்களை புனரமைக்க, 154 பணிகளுக்கு, ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பாசன கால்வாய்களை துார்வாரும் பணியை கண்காணிக்க, அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது.
பி.ஏ.பி., உடுமலை திருமூர்த்தி கோட்டத்தில், இத்திட்டத்தின் கீழ், 44 பணிகள் மேற்கொள்ள, 2.88 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது பணிகள் துவங்கி, தீவிரமாக நடந்து வரும் நிலையில், கண்காணிப்பு அலுவலரும், நீர் மேலாண்மை பிரிவு செயற்பொறியாளருமான புவனேஸ்வரி தலைமையில், உதவி செயற்பொறியாளர் ஆனந்த பால தண்டபாணி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
உப்பாறு அணை பிரிவு,பூலாங்கிணர் கால்வாய் பகிர்மான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள அறிவுறுத்தினர்.
ஆய்வின் போது, பி.ஏ.பி., திருமூர்த்தி கோட்ட செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் பாபு சபரீஸ்வரன், உதவி பொறியாளர்கள் விஜயசேகர், தீபக் செல்வகுமார் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

