/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவியை கடித்த நாய் பள்ளி மீது பெற்றோர் புகார்
/
மாணவியை கடித்த நாய் பள்ளி மீது பெற்றோர் புகார்
ADDED : மார் 18, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : இடுவாயை சேர்ந்தவர், ஒன்பது வயது சிறுமி. இவர் அருகே உள்ள அரசு பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு செல்லும் போது, பள்ளி அருகே தெருநாய் ஒன்று கடித்தது.
இதுகுறித்து மதியம் ஆசிரியரிடம் தெரிவித்தார். தொடர்ந்து பெற்றோருக்கு மொபைல் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. மாலையில் தான் தெரிவித்தனர். இதற்கு பெற்றோர் தரப்பில் பள்ளியில் இருந்து முறையாக தகவல் கொடுக்கவில்லை என்று பள்ளியில் வாக்குவாதம் செய்தனர். தகவலறிந்து சென்ற மங்கலம் போலீசார் சமாதனப்படுத்தி பெற்றோரை அனுப்பி வைத்தனர்.