/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டூவீலர் ஓட்டிய சிறுவன் பெற்றோருக்கு அபராதம்
/
டூவீலர் ஓட்டிய சிறுவன் பெற்றோருக்கு அபராதம்
ADDED : டிச 23, 2024 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர், கே.வி.ஆர்., நகர் போக்குவரத்து எஸ்.ஐ., கண்ணன் தலைமையில் தாராபுரம் ரோடு, பலவஞ்சிபாளையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஒரு டூவீலரில், 18 வயதுக்கு கீழ் உள்ள நான்கு பேர் வந்தனர்.
அவர்களுக்கு அறிவுரை வழங்கிய போலீசார், வாகனம் ஓட்டிய சிறுவனின் பெற்றோர் மீது வழக்கு பதிந்து, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பெற்றோரை ஸ்டேஷனுக்கு அழைத்து அறிவுரை வழங்கப்பட்டது.
மாநகரம் முழுவதும் விபத்தில்லா திருப்பூர் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை அன்றாடம் போலீசார் மேற்கொண்டு, நோட்டீஸ்களை வங்கி வருகின்றனர்.

