/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டூவீலர் இயக்கும் சிறுவர்கள் கண்டுகொள்ளாத பெற்றோர் சாலை விபத்துக்கு அச்சாரம்
/
டூவீலர் இயக்கும் சிறுவர்கள் கண்டுகொள்ளாத பெற்றோர் சாலை விபத்துக்கு அச்சாரம்
டூவீலர் இயக்கும் சிறுவர்கள் கண்டுகொள்ளாத பெற்றோர் சாலை விபத்துக்கு அச்சாரம்
டூவீலர் இயக்கும் சிறுவர்கள் கண்டுகொள்ளாத பெற்றோர் சாலை விபத்துக்கு அச்சாரம்
ADDED : அக் 26, 2025 03:04 AM

அவிநாசி: திருப்பூர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமியர் அதிக அளவில் டூ வீலர் வாகனத்தை இயக்குவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
போக்குவரத்து விதியின்படி, 18 வயது நிரம்பியவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்ற பின்னரே, டூவீலரை இயக்க வேண்டும்.
அவிநாசி சுற்றியுள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஆங்காங்கே விளையாட செல்பவர்கள் என 18 வயது நிரம்பாத சிறுவர்கள் அதிகளவில் டூவீலரை பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக, ஒரே டூவீலரில் மூன்று முதல் ஐந்து பேர் வரை பயணம் செய்கின்றனர். அதில் ஒரு சிலர் வீலிங் செய்வது, ரோட்டில் சென்று கொண்டிருக்கும் பிற வாகனங்களுக்கு மத்தியில் வேகமாக சென்று வளைத்து செல்வது போன்ற செய்கையால் பிற வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தி நிலைகுலையச் செய்கின்றனர்.
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களே தங்கள் குழந்தைகளுக்கு டூ வீலரை கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இவர்கள் பள்ளிக்கு அருகில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் டூவீலரை நிறுத்திவிட்டு பள்ளிக்குச் சென்று வீட்டுக்கு திரும்பும் போது டூவீலரில் மற்ற மாணவர்களையும் ஏற்றிக்கொண்டு ஓட்டிச் செல்கின்றனர்.
போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வு செய்து இதுபோன்று போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

