/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி ரோட்டில் 'பார்க்கிங்': அவதிக்குள்ளாகும் மாணவர்கள்
/
பள்ளி ரோட்டில் 'பார்க்கிங்': அவதிக்குள்ளாகும் மாணவர்கள்
பள்ளி ரோட்டில் 'பார்க்கிங்': அவதிக்குள்ளாகும் மாணவர்கள்
பள்ளி ரோட்டில் 'பார்க்கிங்': அவதிக்குள்ளாகும் மாணவர்கள்
ADDED : ஆக 07, 2025 07:50 PM
உடுமலை:
உடுமலை வட்டார கல்வி அலுவலக ரோடு 'பார்க்கிங்' பகுதியாக மாறி வருகிறது.
உடுமலை, ராஜேந்திரா வீதியில், அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், நுாற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர்.உடுமலை வட்டாரகல்வி அலுவலகமும், இப்பள்ளி வளாகத்தில், கடந்தாண்டிலிருந்து செயல்படுகிறது.
இதே வளாகத்தில்தான் கேந்திரிய வித்யாலயா பள்ளியும் செயல்படுகிறது. இப்பள்ளிக்கான ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும் செயல்படுகிறது.
இவ்வாறு மத்திய அரசு வகுப்புகள், கல்வி அலுவலகம், மேல்நிலை வகுப்புகள் நடக்கும் பள்ளியை சுற்றியுள்ள சூழல் அசுத்தமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பள்ளி அமைந்திருக்கும் ரோடு, அருகிலுள்ள சந்தைக்கு வரும் சரக்கு லாரிகள், ஆம்னி வேண்கள், கார்கள் நிறுத்தும் 'பார்க்கிங்' ஆகவே மாறிவிட்டது. இதனால், பொதுமக்கள், மாணவர்கள், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
பள்ளி சுவர் தான், அப்பகுதியை கடந்து செல்வோருக்கு, சிறுநீர் கழிக்கும் கழிப்பறையாக பயன்படுகிறது. கல்வி அலுவலகம், மத்திய அரசின் பள்ளி அமைந்தும், இப்பிரச்னைக்கு தீர்வு மட்டும் கிடைக்கவில்லை.
தற்போது, பள்ளி அமைந்துள்ள பகுதியில் ஒரு பக்கம் 'பார்க்கிங்' மறுபக்கம், குப்பைக்கழிவுகள் கொட்டும் இடமாகவும், பள்ளியை சுற்றி அசுத்தமான சூழல் உருவாகியுள்ளது.
பள்ளி சுற்றுச்சுவருக்கு மட்டுமின்றி, சுற்றுச்சூழலையும் காப்பாற்றுவதற்கு, அரசு உடனடியாக தீர்வு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.