/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பார்க்கிங் இடமானது ரோடு; கடைவீதியில் இட நெருக்கடி
/
பார்க்கிங் இடமானது ரோடு; கடைவீதியில் இட நெருக்கடி
ADDED : ஏப் 14, 2025 05:29 AM
பல்லடம் : பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில், வணிக வளாகங்கள், வாரச் சந்தை, தினசரி மார்க்கெட், உழவர் சந்தை உள்ளிட்ட அனைத்தும் ஒருங்கிணைந்த கடைவீதியாக உள்ளது.
தினசரி நுாற்றுக்கணக்கான வியாபாரிகள், பொதுமக்கள் இங்கு வந்து செல்லும் நிலையில், வார சந்தை நடைபெறும் திங்கட்கிழமை நாள் உட்பட முகூர்த்தம் உள்ளிட்ட விசேஷ தினங்களில், கடைவீதியில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கு இணையாக, எண்ணற்ற வாகனங்களும் வந்து செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. கடைவீதியில் உள்ள பெரும்பாலான வணிக வளாகங்களுக்கு பார்க்கிங் வசதி கிடையாது. நகராட்சி சார்பிலும் பார்க்கிங் வசதியும் செய்யப்படாததால்,
அனைத்து வாகனங்களும் ரோட்டில் தான் பார்க்கிங் செய்யப்படுகின்றன. பல்லடம் பொங்காளியம்மன் கோவில் எதிரே உள்ள காலி இடத்தில், எண்ணற்ற நான்கு சக்கர வாகனங்கள், ரோட்டிலேயே நிறுத்தப்படுவதால், இவ்வழியாக வாகனங்கள் வந்து செல்வதில் இடையூறு ஏற்படுவதுடன், தேவையற்றபோக்குவரத்து நெரிசலும் உண்டாகிறது.
கடைவீதியில் வானங்கள் பார்க்கிங் செய்யப்படுவதை ஒழுங்குபடுத்த வேண்டும். நடைபாதை வியாபாரிகள், ரோட்டோரத்தில் கடை அமைக்க அறிவுறுத்த வேண்டும். நகராட்சியும், போலீசாரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, கடைவீதியில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.

