/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பகுதி நேர வேலைவாய்ப்பு' மோசடி பெண்ணிடம் ரூ.44 லட்சம் கைவரிசை
/
'பகுதி நேர வேலைவாய்ப்பு' மோசடி பெண்ணிடம் ரூ.44 லட்சம் கைவரிசை
'பகுதி நேர வேலைவாய்ப்பு' மோசடி பெண்ணிடம் ரூ.44 லட்சம் கைவரிசை
'பகுதி நேர வேலைவாய்ப்பு' மோசடி பெண்ணிடம் ரூ.44 லட்சம் கைவரிசை
ADDED : மே 01, 2025 05:15 AM
திருப்பூர் : திருப்பூரில் பகுதி நேர வேலைவாய்ப்பு மூலம் கூடுதலாக சம்பாதிக்கலாம் என கூறி, 44.19 லட்சம் ரூபாயை பெண்ணிடம் கும்பல் மோசடி செய்தது.
திருப்பூர், அவிநாசி ரோட்டை சேர்ந்தவர், 45 வயது பெண். இவருக்கு கடந்த 6ம் தேதி 'பேஸ்புக்'கில் பகுதி நேரம் வேலைவாய்ப்பு என்ற விளம்பரம் என்று இருந்தது. அந்த லிங்க்கை தொட்டு டெலிகிராம் குழுவில் இணைந்தார். அதில் பேசிய ஜானவி சர்மா என்ற பெண், தங்கள் நிறுவனத்தில் பகுதிநேர வேலைக்காக ஆட்கள் தேவைப்படுவதாகவும், எந்த வித முதலீடும் இல்லாமல் அன்றாடம் அவர்கள் சொல்லும் ஓட்டலுக்கு மதிப்பீடு அளிக்கும் வகையில், பணம் சம்பாதிக்கலாம் என்று கூறினார். இதை நம்பி, அவர்கள் கூறியபடி பல்வேறு 'டாஸ்க்'குகளை முடித்தார். இதன் மூலம், ஒரு லட்சத்து, 38 ஆயிரம் ரூபாய் லாபம் வங்கி கணக்குக்கு வந்தது.
இதையடுத்து, பல்வேறு தவணைகளாக பணத்தை கட்டினார். பின், குழுவில் உள்ள ஒருவர் 'டாஸ்க்'கை தவறாக செய்ததால் மேலும் பணம் கட்டினால் தான், பணத்தை எடுக்க முடியும் என கூறியுள்ளனர். இதை நம்பி, பல தவணைகளாக, 44 லட்சத்து, 19 ஆயிரம் ரூபாயை கட்டினார். ஆனால், பணத்தை எடுக்க முடியவில்லை. பின் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.