/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பார்த்தசாரதியின் பாதம் பணிவோம்; களைகட்டிய புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
/
பார்த்தசாரதியின் பாதம் பணிவோம்; களைகட்டிய புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
பார்த்தசாரதியின் பாதம் பணிவோம்; களைகட்டிய புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
பார்த்தசாரதியின் பாதம் பணிவோம்; களைகட்டிய புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
ADDED : அக் 06, 2024 03:40 AM

திருப்பூர் : புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புரட்டாசி சனிக்கிழமையில், பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், அதிகாலை, 5:30 மணிக்கு, நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன், கருட வாகனத்தில் எழுந்தருளினார்; தொடர்ந்து, திருவீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பூர் பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில், வாராவரம், அன்னதானம் வழங்கப்படுகிறது.
மூன்றாவது வாரமான நேற்றும், காலை, மாலை என, இரண்டு வேளையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காலை முதல், இரவு, 8:30 மணி வரை, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். பெருமாள் தாசர்களுக்கு, அரிசி, பருப்பு மற்றும் பச்சைக் காய்கறிகளை படைத்து, பக்தர்கள் வழிபட்டனர்.
திருமுருகன்பூண்டி வரத ராஜபெருமாள் கோவில், அவிநாசி வரதராஜபெருமாள் கோவில், மொண்டிபாளையம் வெங்கடேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர் திருப்பதி கோவில், தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில், கோவில்வழி வரதராஜபெருமாள் கோவில் என, அனைத்து பெருமாள் கோவில்களிலும், புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு களைகட்டியது.
மாலை நேரத்தில், பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள், பஜனை நடைபெற்றது.