/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போர்ச்சுக்கல் வர்த்தகர்கள் பங்கேற்பு
/
போர்ச்சுக்கல் வர்த்தகர்கள் பங்கேற்பு
ADDED : அக் 02, 2025 01:15 AM

திருப்பூர், காலேஜ் ரோட்டில், தனியார் ஆடை உற்பத்தி நிறுவனத்துக்கு போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த வர்த்தகர்கள், வர்த்தக விஷயமாக திருப்பூர் வந்தனர். நேற்று, நிறுவனத்தில் நடந்த ஆயுதபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்ற அவர்கள், பூஜையை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த செண்டை மேளத்துடன் ஒன்றினர். நீண்ட நேரம் மேளம் வாசிக்க செய்து, கலைஞர்களின் நடன அசைவுகளை கற்று, தாங்களும் நடனமாடி மகிழ்ந்தனர்.
பனியன் நிறுவன உரிமையாளர் ரமேஷ் கூறுகையில், ''திருப்பூர் மட்டுமின்றி, இந்தியா மற்றும் உலகெங்கும் மனித வளம் சார்ந்த விஷயங்களில் போர்ச்சுக்கல் வர்த்தக குழுவினர் சிறப்பு கவனம் செலுத்துகின்றனர். ஆடை உற்பத்தி முதற்கொண்டு, உற்பத்தி சார்ந்த செயல்பாடுகளால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.
நீர், நிலம், காற்றுக்கு மாசு ஏற்படாத வகையில் அனைத்தும் சரியாக நடத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் அறிவுறுத்தல்; ஆடை உற்பத்தி, சாயமேற்றுதலில் அதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்குகின்றனர்.
ஆயுத பூஜையில் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்று, நடனமாடி மகிழ்ந்தனர்,'' என்றார்.