/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போயம்பாளையத்தில் மும்மதத்தினர் பங்கேற்பு
/
போயம்பாளையத்தில் மும்மதத்தினர் பங்கேற்பு
ADDED : ஆக 15, 2025 11:58 PM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி, போயம்பாளையம் பழனிசாமி நகரில், நுாருல் ஹூதா சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் உள்ளது. இதன் முன்புறம் ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா, மும்மதத்தினர் பங்கேற்று நடைபெறுவது வழக்கம்.
அவ்வகையில் நேற்று 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றப்பட்டது. பள்ளிவாசல் நிர்வாகிகள், முகமதுரபீக், சேக் அலாவுதீன், கவுன்சிலர் வேலம்மாள், தி.மு.க., பிரமுகர் காந்தி, நுகர்வோர் நலச் சங்கம் சரவணன், கருணாகரன், பிரான்சிஸ், சேவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேசிய கொடியேற்றி அப்பகுதியினர் மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மத நல்லிணக்கம் வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் தேசியப் பண்டிகைகளை ஒன்று கூடி நடத்தும் செயல் பல தரப்பினரின் பாராட்டையும் பெற்றது.