/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகர பஸ் ஸ்டாண்ட்களில் பயணிகள் பரிதவிப்பு! மேம்படுத்தப்படாத வசதிகள்; சொந்த ஊர் செல்வதற்குள் 'வலி'
/
மாநகர பஸ் ஸ்டாண்ட்களில் பயணிகள் பரிதவிப்பு! மேம்படுத்தப்படாத வசதிகள்; சொந்த ஊர் செல்வதற்குள் 'வலி'
மாநகர பஸ் ஸ்டாண்ட்களில் பயணிகள் பரிதவிப்பு! மேம்படுத்தப்படாத வசதிகள்; சொந்த ஊர் செல்வதற்குள் 'வலி'
மாநகர பஸ் ஸ்டாண்ட்களில் பயணிகள் பரிதவிப்பு! மேம்படுத்தப்படாத வசதிகள்; சொந்த ஊர் செல்வதற்குள் 'வலி'
ADDED : அக் 16, 2025 11:40 PM

திருப்பூர்: தீபாவளி கொண்டாட குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு திருப்பூரில் இருந்து செல்லும்போது தொழிலாளர் முகங்களில் மகிழ்ச்சி கரைபுரளும்; இந்த மகிழ்ச்சி, வழக்கமாக பஸ் ஸ்டாண்ட் வந்தவுடனேயே கரைந்துவிடுகிறது. சுகாதாரம் உள்ளிட்ட எந்த வசதிகளும் இன்மை, பஸ்கள் எங்கே நிற்கிறது என்றே தெரியாத நிலைமை உள்ளிட்டவை இதற்குக் காரணமாகின்றன.
இந்த முறை தீபாவளியையொட்டி தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம் துவங்கியுள்ள நிலையில், மாநகரில் மொத்தம் உள்ள நான்கு பஸ் ஸ்டாண்ட்களில் கள நிலவரத்தை ஆய்வு செய்தது நம் நிருபர்கள் குழு. ''எப்பத்தாங்க மாறப்போகுது நம்ம ஊரு பஸ் ஸ்டாண்ட்?'' என்ற கேள்விக்கணையை எழுப்பினர் பயணிகள்.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் பஸ் ஸ்டாண்ட் இது. அதிகளவு கூட்டம் இருப்பதால் பாதுகாப்புக்காக பேரிகாட், பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, அம்மணிங்களா... நகை நட்டு எல்லாம் உஷாரா வெச்சுக்கோங்க.. பாதுகாப்பா இருங்க... சிகப்பு சட்டக்காரரே, உங்களத்தான்..
கொஞ்சம் பாத்து கவனமா நில்லுங்க... நம்ம கூடவேதா இருப்பாங்க... யாரையும் நம்பாதீங்க... முடிஞ்ச அளவு காசு எடுத்துட்டு வராதீங்க... கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்துங்க...'' என்று கவுண்டமணி குரலில் விழிப்புணர்வு ஆடியோ ஒலித்துக்கொண்டிருந்தது. கண்காணிப்புக்கோபுரம் வாயிலாக போலீசார் கண்காணித்தனர். குடிநீர், கட்டண கழிப்பிட வசதிகள் நன்றாக இருக்கின்றன. துாய்மைப்பணி நடந்தாலும், பயணியர் பலர், முறையாக குப்பைத்தொட்டியில் குப்பையை வீசுவதில்லை. கண்ட இடத்தில் எச்சில் துப்புவோரும் அதிகம். மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே துாய்மை சாத்தியம். அவசர உதவி தொலைபேசி எண்: 9498101307 என்று குறிப்பிடப்பட்டு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.