/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலை - திருப்பூர் பஸ் இயக்குவதில் தாமதம் பயணிகள் அதிருப்தி
/
உடுமலை - திருப்பூர் பஸ் இயக்குவதில் தாமதம் பயணிகள் அதிருப்தி
உடுமலை - திருப்பூர் பஸ் இயக்குவதில் தாமதம் பயணிகள் அதிருப்தி
உடுமலை - திருப்பூர் பஸ் இயக்குவதில் தாமதம் பயணிகள் அதிருப்தி
ADDED : நவ 14, 2024 04:27 AM
உடுமலை: உடுமலையிலிருந்து திருப்பூருக்கு, பஸ்கள் சரியான நேர இடைவெளியில் இயக்கப்படாமல் இருப்பதால், அரசுப்பணியாளர்கள் பணிக்குச்செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உடுமலையிலிருந்து திருப்பூருக்கு அரைமணி நேர இடைவெளியில், பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், கடந்த சில மாதங்களாக முறையாக இயக்கப்படாமல், காலை நேரங்களில் மிகவும் தாமதமாவதால், பயணியர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வழக்கமாக காலை நேரங்களில், 7:00 மணி முதல் 9:00 மணி வரை மூன்று பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால், வாரத்தில் அதிக நாட்கள் அவ்வாறு இயக்கப்படுவதில்லை.
காலை, 7:00 மணி முதல் 9:00 மணி வரை உடுமலையிலிருந்து திருப்பூருக்கு பஸ்கள் எதுவும் இயக்கப்படுவதில்லை. மீதமுள்ள மூன்று நாட்கள் மட்டுமே இந்த நேரத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் பஸ்கள் செல்கின்றன.
உடுமலையிலிருந்து திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அரசுத்துறைகள், மற்ற அரசு அலுவலகங்களுக்கு என, நுாற்றுக்கும் அதிகமான பணியாளர்கள் பணிக்குச்செல்கின்றனர்.
காலை நேரத்தில், இவ்வாறு பஸ்கள் இயக்குவதில், தாமதம் ஏற்படுவதால் பணிக்கு செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. அரசுப்பணியாளர்கள் மட்டுமில்லாமல், பல தனியார் நிறுவன அலுவலர்கள், தொழிலாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
உடுமலை கிளை போக்குவரத்துக்கழகமும், இப்பிரச்னை குறித்து கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாக, பயணியர் குமுறகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து, குறிப்பிட்ட இடைவெளியில் முறையாக தொடர்ந்து திருப்பூருக்கு பஸ்கள் இயக்கப்பட வேண்டுமென, பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.

