/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடுதல் ரயில்கள் இயக்க பயணியர் வலியுறுத்தல்
/
கூடுதல் ரயில்கள் இயக்க பயணியர் வலியுறுத்தல்
ADDED : நவ 25, 2025 05:45 AM
உடுமலை: உடுமலை வழியாக, தென் மாவட்டங்களுக்கு போதிய ரயில்கள் இல்லாததால், பயணியர் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இதன் வழியாக, கோவை - மதுரை, திருவனந்தபுரம் - ராமேஸ்வரம், பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன.
உடுமலையிலிருந்து, தென் மாவட்ட நகரங்களுக்கு செல்ல தினமும் ஏராளமான மக்கள் ரயிலில் செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு தற்போது செல்லும் ரயில்கள் போதுமானதாக இல்லை.
இதனால், இயக்கப்படும் ரயில்களில் அமர இடமின்றியும், நெருக்கடியில் செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே, உடுமலை வழியாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அப்போது தான் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

